நேற்று இரவு களவு

நேற்று இரவு களவு
குறைந்தது இருவரின் தொலைவு
இரவு முழுக்க பேச்சு
புரிந்தது உதடுகளின் ஆட்சி
கண்டது கடற்கரை காட்சி
அதற்கு ஆழியும் (மெரினா) தோழியும் சாட்சி
இதற்கிடையில் தொடர்பு கொண்டாள் அவள் அம்மா
சொன்னால் தூங்கி கிடந்தேன் சும்மா
உன் இடையிலா ! என் மடியிலா!
என்ன நடிப்பு அம்மம்மா!
தொடர் வண்டியில் தொல்லை இல்லை
கொடுத்த முத்தங்களோ எல்லை இல்லை
காற்று வீச
காதல் பேச
மீசை கூச
முடிவில்லா களவு
முடியாத உறவு.

எழுதியவர் : (6-Mar-23, 3:30 am)
சேர்த்தது : ரெனால்ட்அரவிந்த்
Tanglish : netru iravu kalavu
பார்வை : 114

மேலே