பெண்ணியம்

பெண் சுதந்திரம் பற்றி ஒருவருக்கொருவர் வித்தியாசமாக ஒரே விசயங்களை பேசுவார்கள். அது எல்லாமே ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இருக்கும். ஆனால், ஒருசிலர், புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். சுதந்திரம் என்பது நாம் இஷ்டத்துக்கு எதுவும் செய்வது என்று. அதக்கு எதிர்ப்புகள் வருகின்ற போது, பெண் சுதந்திரம் வேண்டும். என்று சொல்லிக் கொள்வார்கள். ஆண்களுக்கு நிகராக இருப்பதும், அவர்களை வெற்றிகொள்வதும், நினைத்ததை எல்லாம் முடிப்பதுவும் சுதந்திரம் என்று நினைத்துக்கொண்டு இருப்பது பெண் சுதந்திரம் ஆகாது. உன் தேவைகளை உன் முயற்சியால் செய்ய சக்தி இருந்தால், துணிந்து செய், அது யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருந்தால் போதும். இதற்கு தடை ஏதும் இல்லை என்றால் உனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. அதற்கு தடை இருந்தால் அதை உடை. அது பெண் சுதந்திர போராட்டம்.

உண்மையில் அந்தகால பெண்கள் தான் சுதந்திரம் இன்றி இருந்தார்கள். அந்த நிலையிலும் அவர்கள் பலதுறைகளில் வெற்றி கண்டார்கள். அவர்கள் சுதந்திரத்தை நமக்கு போராடி பெற்று தந்துவிட்டார்கள். இந்த காலத்தில் அந்த அளவிற்கு போராட்டம் எதுவும் இல்லை
பெண் சுதந்திர போராட்டம் எல்லாம், பெண்கள் சமையலறையில் மட்டும் இருந்த காலம். அவை, எழுத்தாளர் அம்பை அவர்களின் எழுத்துக்கள் பிரதிபலிக்கும். ஆண்களுக்கு என்று ஒரு மொழி பெண்களுக்கென்று ஒரு மொழி. ஆண்களுகென்று ஒரு வேலை. பெண்களுக்கென்று ஒரு வேலை. இவை எல்லாம் இப்போது இல்லை.
தமிழ்நாட்டில் இதுவரை பெண் பேருந்து ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில் இருந்ததை, இன்று சர்மிளா அவர்கள் நிறைவேற்றி விட்டார்.
கல்வி அறிவு இல்லாத காலங்களில், பெண்களின் பெருமை தெரியாமல் இருந்தது. இன்று கல்வி அறிவை பெற்றுவிட்டார் கள். கல்வி அறிவை பென்ற பெண்களுக்கு தெரியும், அடுத்த தலைமுறையை இந்த தலைமுறையில் இருந்து எப்படி முன்னேறுவது என்று.

வலிகள் ஆயிரம் இருந்தாலும் மனதளவில் உறுதி கொண்டவள். அவள் நாட்டையும் வீட்டையும் ஆளும் ஆளுமை உடையவள்.
அம்மாவின் பெருமையை பேசாதவர்கள் யாரும் இல்லை. பெண்மையின் சக்திக்கு சான்று ஒன்று போதும், அம்மா. பெண்மையை போற்றுவோம்.

பெண்கள் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : AS (8-Mar-23, 10:04 am)
சேர்த்தது : சுருளிஸ்வரி
Tanglish : penniam
பார்வை : 224

மேலே