நிலவொளியாய் அவள் முகம்

பூரண நிலவு பௌர்ணமியில் அது
தாரணியில் இரவில் தன்னொளி பரப்பும்
தாரணி இவள் என்னெதிர் வீட்டு காதலி
இரவில் முற்றத்தில் நானிருக்க அவள்
வீட்டு ஜன்னலில் என்னை நோக்கி
பட்டொளி பார்வை பரப்பும் நித்தம்
இரவில் என்னை நனைக்கும் தன்னொளி
அதுவே என்புரணி நிலவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசவன் (12-Mar-23, 9:35 am)
பார்வை : 176

மேலே