இரு மனங்கள்

எத்தனை பெரிய
இதயம் உனக்கு ...

என் முகப்படங்கள்
நம் வாழ்வின்
நிழற்படங்கள் என
ஆயிரம் அரைந்து
வைத்துள்ளாய்
அதன் சுவரில் !

எத்தனை பழசாயினும்
எடுத்து நீட்டுகிறாய்
எப்போது கேட்டாலும் !

எனக்கோ
அது மிகச் சிறிது

உன்னிரு கண்களும் - நாம்
முதற்கண்ட காட்சியும்
மட்டுமே
நிரப்பி விட்டது
என் இதய அறையின்
மொத்தத்தையும்,

ரசிப்பதாய் இருந்தாலும் 
மத்த எதையும்
தொலைத்தே விடுகிறேன்
சேமித்து வைக்க
இடமின்றி !

எழுதியவர் : நா முரளிதரன் (12-Mar-23, 3:17 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : iru manangal
பார்வை : 229

மேலே