மெல்லிய இவள்தன் கூந்தல்போல் உன்னிதழ் மல்லிகையே மென்மை இல்லை

மல்லிகைப் பந்தலில் நுழைந்த தென்றல்
மெல்ல மலர்ந்திடும் மல்லிகையை கேட்டது
மெல்லிய இவள்தன் கூந்தல்போல் உன்னிதழ்
மல்லிகையே மென்மை இல்லையிது உண்மை
மல்லிகை முகம்சுளித்தது அவளோ அந்த
மல்லிகையை பறித்து தொடுத்து சூடிக்கொண்டாள்
மல்லிகை மகிழ்ந்து இன்னும் மணந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-23, 9:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே