சொல்லெடுத்து நான்தொடுத்தேன் ஓர்மலர்க் கவிதை
மல்லிகைப் பந்தலில் நுழைந்த தென்றல்
மெல்ல மலர்ந்திடும் மல்லிகையை கேட்டது
மெல்லிய இவள்தன் கூந்தல்போல் உன்னிதழ்
மல்லிகையே மென்மை இல்லையிது உண்மை
மல்லிகை முகம்சுளித்தது அவளோ அந்த
மல்லிகையை பறித்து தொடுத்து சூடினாள்
மல்லிகை மகிழ்ந்து இன்னும் மணந்தது
சொல்லெடுத்து நான்தொடுத்தேன் ஓர்மலர்க் கவிதை
---முன் பதிவை இரண்டாகப் பிரித்து இரண்டாம் பகுதியில்
ஓரடி சேர்த்து புதிய வடிவில் தந்திருக்கிறேன்