மங்கையும் மல்லிகையும்
மல்லிகைப் பந்தல் நுழைந்தபூந் தென்றலும்
மெல்ல மலர்ந்திடும் மல்லிகையை கேட்டது
மெல்லிய பாவைதன் கூந்தல்போல் உன்னிதழ்
மல்லிகையே மென்மைஇல் லை
மல்லிகை யோமுகத் தைசுளிக்க பாவையோ
மல்லிகை யைப்பறித்து சூடினாள் கூந்தலில்
மல்லிகை யும்மகிழ்ந்து இன்னும் மணந்தது
சொல்லால் வடித்தேன் கவி
---முன்பகுதி கவிதை இங்கே வெண்பாவாக