சலதோடங் கொண்டேன்நான் - இன்னிசை வெண்பா
நன்மொழி மேல்வைப்பு இன்னிசை வெண்பா
சலதோடங் கொண்டேன்நான் சங்கடமாய்த் தும்ம
பலமுறை கேட்டதும் பார்த்து - நலமே
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று!
- வ.க.கன்னியப்பன்
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று! ௧௩௧௭
- புலவி நுணுக்கம், கற்பியல், காமத்துப்பால், திருக்குறள்