சவுக்கால் அடித்து

சவுக்கால் அடித்து....!

அவன் coatஐயும் suitஐயும்
கழட்டி வீசடா
அவன் shoeஐயும் சேர்த்து
கழட்டி எறியடா.

உன் பணத்தில் சூதாடி
வயிறு வளர்க்கும் அவன்
கை நிறைய மாதா மாதம்
சம்பளம் எடுத்திடுவான்
வருட முடிவில் million $
bonuசும் பெற்றிடுவான்.

ஆனால் திடீரென
பணம் எல்லாம் முடிஞ்சுச்சு
என்று கூக்கிரலிடுவான்
தன்னை (bank) காப்பாற்ற
உன்னையும் உதவிக்கு
அழைத்திடுவான்
இல்லை என்றால் நாடே
அழிந்திடும் என்பான்

இப்படி இப்படி சொல்லி
அவனும் அவன் சகாக்களும்
உன் நாட்டு கயானாவை
சூறாடிவிடுவார்.

சவுக்கால் அடித்து
அவர்களை எல்லாம் நீ
கூண்டில் தள்ளி விடு.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (24-Mar-23, 11:54 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 32

மேலே