240 அளவிலாத் தீமையைச் செய்யத் தூண்டும் சூது – சூது 4

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)

வளமலி நிடதநா டளிக்கு மாண்புசேர்
நளனையும் அலைவுசெய் நாசச் சூதுதான்
களவுபொய் சினம்பகை காம (மி)யாவையும்
அளவறப் பயிற்றிடும் ஐயன் போலுமே. 4

– சூது, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”செழிப்புமிக்க நிடத நாட்டை ஆண்ட சிறப்புப் பொருந்திய நளனையும் துன்பம் கொள்ளச் செய்த நாசத்தை ஏற்படுத்தும் சூதுதான் களவு, பொய், சினம், பகை, காமம் முதலிய தீமைகள் யாவையும் செய்யத் தூண்டும் தந்தை போன்றவை” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

வளம் - செழிப்பு. மாண்பு - சிறப்பு. அலைவு - துன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-23, 6:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே