இனியவன் கண்ணனே
இனியவை i இவ்வுலகில் எவை என்றால்
இனியவை இயற்கைத் தரும் கனியும்
கரும்பின் சாரும் கற்கண்டு பாகும்
என்றே நினைத்திருந்தேன் பாவினான்
இன்று கண்ணா உன்னைக் கண்டபின்
உன்னினும் இனியவை வேறொன்றும் இல்லையே
இவ்வுலகில் ஆய்க்குலத் தரசே
காவிரிக் கரையில் பள்ளிகொண்டோனே
எம்மானே எந்தையே கண்ணா அரங்கனே