மீண்டும்

அது ஓர் மண் குவளை அதனால்தான் உடைந்துவிட்டது.
-------------------------------------------------------
நான் இருக்கிறேன் என கூறியவர்கள் நட்பை எல்லாம் வாழ்வின் முக்கிய கதாபாத்திரமாக எண்ணி ஒரு அழகிய மண் குவளை செய்திருந்தேன்.
அதில் வாழ்க்கையில் நடக்கும் இன்பம் துன்பம் என அனைத்தையும் சேமித்து நம்பிக்கை என்னும் மந்திரத்தால் அன்பை நிரப்பி வந்தேன்.
வாழ்க்கையில் சிக்குண்டு நிற்கும்போதும் கூட அந்த குவளையை தூக்கிகொண்டுதான்
சென்றேன்.

என்ன செய்ய ஒவ்வொரு பிரயத்தனத்திலும் குவளை எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி உடையதான் செய்தது. இருப்பினும் சிதறிய குவளையை ஒன்று சேர்த்து அதனால் ஏற்பட்ட கண்ணீர் துளிகளால் வலுவூட்டி மீண்டும் ஓர் மண் குவளை செய்துள்ளேன்.

இந்த முறை செய்த மண்குவளை எதிர்பார்ப்புகளுடன் பழகும் நண்பர்கள் போல் அல்லாமல் தெளிவு பெற்ற மன நிலையுடன் தன்னம்பிக்கை கொண்ட ஏகாந்தம் என்னும் மாய மணலால் பூசியுள்ளேன்.

வடுக்கள் தானே காயங்களை அதிகம் நினைவுபடுத்தி நம்மை உயர்ந்த இடத்திற்கு வலுவூட்டும் அதனால் அந்த வடுக்களையும் குவளையில் நிரப்பி வைக்கிறேன் - தவணை முறையில் நான் இருக்கிறேன் என கூறியவர்களுக்கு வட்டியுடன் நன்றி கூற.

- கௌசல்யா சேகர்

எழுதியவர் : Kowsalya sekar (28-Mar-23, 12:19 pm)
Tanglish : meendum
பார்வை : 78

மேலே