கல்லூரி நினைவுகள்
எட்டு மணிதான் ஆச்சு
எட்டுத்திக்கும் எங்களோட பேச்சு
எல்லோரும் கல்லூரிக்குள் வந்தது என்னாச்சு...
வகுப்பறை தான் எங்களோட மூச்சு
மூன்று மாடி ஏறி
மூன்று வருடம் ஆச்சு...
ஆசிரியர் உடைய அன்பு பேச்சு
நண்பன் உடைய வம்பு பேச்சு
எடக்கு மடக்கு பேச்சு
எல்லாம் எங்க போச்சு ...
கண் முன் வந்த - அந்த
பெண் முகத்தை காணலையே
காதல் உணர்வு வந்த நாள் முதலா
நானும் உன்னை மறக்கலையே...
கல்லுரி காலங்கள்
கனவுகளா போனதே! - நீ
கண் சிமிட்டும் அந்த ஓரப்பார்வையும்
என் நெஞ்ச சுட்டு பொசுக்குதே...
கல்லூரி நினைவுகள் எல்லாம்
என் மனசுக்குள்ள வந்து வந்து போகுதே...
தினமும் அதை நினைத்து நினைத்து
என் மனசும் ரொம்ப நோகுதே...
கல்லூரி காலங்கள் திரும்பி வா என்று
என் மனசும் கேட்குதே...
-அ.நாச்சான்