கவலை
"கவலை"யில்லா மனிதன்
யாருமில்லை உலகத்திலே
"கவலை'யை காலமெல்லாம்
மனதிலே சுமந்துக்
கொண்டே இருப்பதால்
"கவலை" நம்மை விட்டு
விலக போவதில்லை
"கவலை" இருக்குமிடத்தில்
இருந்துக் கொண்டேதான்
இருக்கும்
"கவலை" என்னும் சாத்தானுக்கு
உன் மனதிலே இடம் கொடுத்து
ஆட்டம் போட அனுமதிக்காதே
அனுமதித்தால்
அது குத்தாட்டம் போட்டுவிட்டு
உன்னை புதைக்குழிக்குள்
தள்ளிவிட்டுதான் செல்லும்....!!
--கோவை சுபா