காதல் என்பது

கனவு இனிப்பின் காதல் கூடும்
காதல் கூடின் அன்பு வளரும்

அன்பு கூட அகம் மலரும்
அகம் மலர அறிவு சிறக்கும்

அறிவு சிறக்க குணம் மாறும்
குணம் மாற பண்பு உயரும்

பண்பு உயர நேசம் சிறக்கும்
நேசம் உயர பாசம் வரும்

பாசம் கூட பிரியாசொந்தம் வரும்
சொந்தம் கூட சுகம் ஏற்படும்

சுகம் வர சுமையும் கூடும்
சுமையை சமமாக கடக்க

காதல் யென்பது
எண்பதிலும் ஏகாந்தம்...

காதல் யெனப் படுவது யாதெனின்
தீதில்லா தீம்தொடர் ஆகும்

காதல் என்பது

புறந்தனையே புறந்தள்ளி அகந்தனில் அகமகிழ்வதே

யென்பது புலனாகும்
இப்புலன்தான் காதல்

வேருக்கு புனலாம்.

எழுதியவர் : பாளை பாண்டி (31-Mar-23, 5:42 am)
சேர்த்தது : பாளை பாண்டி
Tanglish : kaadhal enbathu
பார்வை : 159

மேலே