குழப்பம்

எல்லோரும் சரியாகத்தான்
நடக்கிறார்கள்.
எல்லோரும்
உண்மையாகவும்...
திண்மையாகவும்.....
திறமையாகவும்.....
தியாகியாகவும் ....
இருக்கிறார்கள்.
குறுக்கு வழியில்
வருபவர்கள்கூட
சட்ட ஒழுங்கை
ஓங்கிப் பேசுகிறார்கள்.
நான்தான் சரியில்லையோ என
தடுமாறி தவிக்கிறேன்.
இவர்களோடு சமாதானமாகவோ
அனுசரித்தோ போகமுடியாமல்
தனியாய்...அனாதையாய்
குழம்பி நிற்கிறேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (3-Apr-23, 8:52 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kulapam
பார்வை : 105

மேலே