நனிபலராம் பன்மையிற் பாடுடையது இல் - பழமொழி நானூறு 306

நேரிசை வெண்பா

ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன்
தன்னை எனைத்தும் வியவற்க - துன்னினார்
நன்மை யிலராய் விடினும் நனிபலராம்
பன்மையிற் பாடுடைய தில். 306

- பழமொழி நானூறு

பொருளுரை:

பொருந்தாதோர் போரிடத்தும் தம்மைக் கொல்ல நின்ற பொழுதில் வீரத்தில் மிக்கானாயினும் தனித்து நின்ற ஒருமகன் தன்னைக் கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றார் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும் மிகப் பலராயிருத்தலை விட வலிமையுடையது ஒன்றில்லையாதலின் எத்துணையும் வியந்து கூறாதொழிக,

கருத்து:

வீரம் உடைமையினும் படைவலி வேண்டுமென்பது சொல்லப்பட்டது.

விளக்கம்:

பாடு - வலிமை. 'வியவற்க' என்றது தனித்து நின்று வியந்து கூறுதலாற் பயனில்லை என்பது அறிவித்தற்கு.

'நனிபலராம் பன்மையிற் பாடுடையது இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-23, 9:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே