வண்டுகள் மதுவுண்ண வந்தவிடம் நந்தவனம் - கலிவிருத்தம்

(கூவிளம் காய் 3)

வண்டுகள் மதுவுண்ண வந்தவிடம் நந்தவனம்;
தண்கதிர் ஒளியினிலே ததும்புகின்ற இன்பமுடன்
உண்பதை உண்ணுமட்டும் உண்டபின்னே ஓய்வெடுக்க
எண்ணியே மயங்கியவை இங்குமங்கும் பறந்தனவே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-23, 7:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே