இனித்திடும் இவளின் சொல்லே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

மின்னலோ இவளின் கண்கள்
..மிகையிலை இவளின் நோக்கு;
தென்றலோ இவளின் கூந்தல்
..திகட்டுமோ இவளின் பேச்சு!
நன்னெறி இவளின் மூச்சு
..நன்னடை இவளின் போக்கு;
இன்சுவை இவளின் கூற்றே
..இனித்திடும் இவளின் சொல்லே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Apr-23, 3:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே