அம்மா என்ற அன்பு பெட்டகம்
அம்மா என்ற அன்பு பெட்டகம்
அம்மாவின் தன்னலமற்ற அன்புக்கு அளவுகோல் இல்லை
அவள் ஆசைகள் நமது உயர்வன்றி வேறேதும் இல்லை
அவள் இன்னிசையாய் இயங்க சொல்லேதும் வேண்டியதில்லை
அவள் பிறப்பே ஈசன் தன்னை நேரில் காட்டவே மற்றேதுமில்லை
அவள் வாழ்க்கை தன் குடும்பம் அல்லாது மற்று ஏதும் இல்லை
அவளை தன் மக்கள் புறக்கணித்தாலும் அவள் அன்பு குறைவதில்லை
அவள் எதையும் தாங்கும் இதயம் என்பதில் என்றும் சந்தேகமில்லை
அவள் தியாகங்களை நினைத்து பார்க்க திகைப்பு அடங்குவதில்லை
அவள் இறுதியை சந்திக்கும்பொழுதும்கொண்ட நேசம் நீங்குவதில்லை
அவள் நடமாடும் தெய்வம் எனக் காணாதிருக்க வழியே யில்லை