இனிக்கும் இயல்புடனும் இளமை வளம்பெருகும் - சந்தக் கலிவிருத்தம் 13

சந்தக் கலிவிருத்தம் 13
தனன தனனதன தனன தனனதன
[3 5 3 5 சந்த மாத்திரை]

மனத்தின் கனிவதனின் மகிழ்வின் இனிமையென
தொனிக்கும் இனியசொலும் துயரும் விலகிடுமுன்
அனைத்துத் துயர்விலகி அகிலம் மகிழ்வுறவும்
இனிக்கும் இயல்புடனும் இளமை வளம்பெருகும்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-23, 12:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே