கண்ணன் கீதம்
ஆயர்ப்பாடியில் அன்னை யசோதை மடியில்
மாயன் கண்ணன் தவழ்கின்றான் மூடிய
சேலைக்குப் பின்னே தாய் சேய்க்கு பாலூட்ட
சிணுங்கியும் சிரித்தும் விஷமக்கார கண்ணன்
பால் பருகும் அழகே அழகு
இவன் விளையாட்டில் யசோதைக்கோ புளகாங்கிதம்
அன்னை அவள் அன்பின் வடிவம்
அறியாள் கொஞ்சமும் தான் அந்த
மாமாயன் மாதவனுக்கே தாய் என்று
தேவ தேவனுக்கே தாய் தெய்வத்தாய் அவள்
என்ன தவம் செய்தாளோ யசோதை
பெற்றத் தாய் தேவகியும் பெறா
பேரின்பத்தை அங்கு கண்ணன் வடிவில்
தன் மடியில் தவழ்ந்து விளையாடும்
திருமாலுக்கே அருந் தாயாய் சேய்
அவனுக்கு இப்படியோர் தெய்வத்தோடு செய்திட