ஆராதனை செய்திடு அழகினை

தூரிகை துணையால் வரைந்த
காரிகை அல்ல இத்தாரகை
அங்கம் எங்கும் தங்கமணிந்து
பளபளக்கும் பட்டாடை உடுத்தி
ஈட்டிமுனை விழியால் ஈர்த்து
எவரையும் வீழ்த்தும் பார்வையுடன்
காட்சி தந்திடும் பாவை இவள் !

சீண்டாதே மங்கையை தீண்டாதே
தூண்டில் போடவும் துடிக்காதே
வீணாக ஆசை வலை வீசாதே
அஃதன்றி தவறாக எண்ணாதே !
ஆராதனை செய்திடு அழகினை
ஆலாலோ பாட்டும் பாடாதே
ஆராரோ கனவும் காணாதே !

விரும்புவது தனிப்பட்ட உரிமை
விஷமத்தனம் செய்வது மடமை !
நாகரீகம் காப்பது உன் கடமை
வாட்டிடும் நிச்சயம் உன் தனிமை !
வாலிபப் பருவத்தின் நிலையது
கவனத்தை மாற்றி செயல்படு
வாழ்வில் வெற்றிபெற பாடுபடு !பழனி குமார்
12.04.2023

எழுதியவர் : பழனி குமார் (12-Apr-23, 3:29 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 860

மேலே