நின்னழகில் வானின் நிலாகூட தோற்றிடும்

தென்றல் தவழ்ந்திடும் தேன்மலர்க ளின்தோட்டம்
திங்களும் தோற்கும் தெவிட்டா துனதுமுகம்
மாலையில் வாநீஉ மா

தென்றல் தவழ்ந்திட தேன்மல ராடுதுபார்
நின்னழகில் வானின் நிலாகூட தோற்றிடும்
அன்பே அருகில் அமர்

தென்றல் தவழ்ந்திடும் தேன்மலர்க ளின்தோட்டம்
நின்னழகில் வானின் நிலாகூட தோற்றிடும்
அன்பே அருகில் அமர்வாய் தயக்கமோ
பொன்னந்தி போகுது பார்


தென்றல் தவழ்ந்திடும் தேன்மலர்க ளின்தோட்டம்
நின்னழகில் வான்நிலா தோற்றிடும் -- என்னெழிலே
அன்பே அருகில் அமர்வாய் தயக்கமோ
பொன்னந்தி போகுது பார்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-23, 5:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே