காதலின சுடரொளியே

காதலின் சுடரொளியே !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

காதலின் சுடரொளியே
கண்மணியே என்னவளே!

மோதலிலே பிறந்தாலும்
மொத்தமாய்க் கிடைத்தாயே!

சாதலும் பிரிக்காதே
சண்டைகளும் முறிக்காதே !

போதாதக் காலமெலாம்
போய்விடுமே புகையெனவே!

வெண்பாலில் கலந்திட்ட
செந்தேனாய் இனிப்பவளே !

வெண்பாவில் ஒலிக்கின்ற
செப்பலிசைச் சொல்லழகி!

மண்பானைச் சோறேஎனை
மயக்கியத்திரு வாரூர்த்தேரே !

மண்ணுலகே வியக்குதடி
மனைவியென வந்தவளே!

நீயின்றி நானில்லை
நிலவின்றி ஒளியில்லை!

தாயின்றி மகனில்லை
தாரணியில் வாழ்வில்லை!

சேயாக எனையேற்ற
செங்கமலம் நீவாழ்க!

வாயாற வாழ்த்துகிறேன்
வசந்தமயில் வாழ்கவாழ்க!

-யாதுமறியான்.

எழுதியவர் : .-யாதுமறியான். (13-Apr-23, 5:27 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 66

மேலே