சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

சோபையிழந்து சோர்ந்திருக்கும் வேளை
சோபகிருது வருசமென்னும் பாவை
பூவைபோல மலருகின்றாள்
புன்னகையால் மிளிருகின்றாள்
தேவையாவும் தீர்த்துவைப்பாள் நாளை
*
மாற்றமின்றி வாடுகின்ற மக்கள்
மனதினுள்ளே ஆயிரமாய் முக்கல்
ஏற்றமுறக் கைகொடுத்து
ஏக்கமெலாம் தீர்த்துவைத்து
சீற்றமின்றிக் காத்திடுவாள் சிக்கல்
*
நாளையென்ப தேதொன்று மில்லை
நம்பிக்கை யால்வகுக்கு மெல்லை
ஆளையாளை அரவணைத்து
அன்புசெய்து கைகொடுத்து
வேளைவர நீக்கிடுவோம் தொல்லை
*
தொல்லைகளாய்த் தொடர்ந்துவரும் துன்பம்
தொடராமல் பார்ப்பதுவே இன்பம்
இல்லையென்ற பேர்களுக்கு
இருப்பதனைக் கொடுத்துதவும்
எல்லோர்க்கும் புதுவருசம் கன்னல்
*
ஏறிவிட்ட விலைவாசி குறைந்து
ஏக்கமுற்ற நிலையாவும் மறைந்து
மாறுதலை தரவென்று
மனம்வைக்கும் புத்தாண்டு
ஆறுதலை தரவேண்டும் நிறைந்து
*
முகநூல் நண்பர்களுக்குப் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Apr-23, 4:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 223

மேலே