தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
சித்திரை மாதம்
பிறந்தது இன்றே !
எத்திசைப் பார்க்கினும்
இன்பத்தின் ஊற்றே !
நித்திரைப் போதுமே
விழித்தெழ லாமே !
பத்தரை மாற்றுத்
தங்கமே வாழ்க !!
சிந்தனைச் சொல்செயல்
யாவினும் வாழும்!
செந்தமிழ். நாட்டிலே
புத்தாண்டுக் கீதம் !
அன்பொடு அருளையும்
நெஞ்சினில் ஏற்றி !
என்றென்றும் கூறுவேன்
நல்வாழ்த்துப் போற்றி !!!
தமிழ்ப் புத்தாண்டு
நல்வாழ்த்துகள் !
-யாதுமறியான்.