ராகம் மாலைக் காதலோ
முல்லை விரியும் மலர்த்தோட்ட மோஇதழ்கள்
மோகத்தில் பாடுதோ மௌனரா கத்தினை
மேகப்பூங் கூந்தலே மின்னல் விழியாளே
ராகம்மா லைக்காத லோ
மோகமுல் லைவிரியும் மென்தோட்ட மோஇதழ்கள்
மோகத்தில் பாடுதோ மௌனரா கத்தினை
மேகப்பூங் கூந்தலே மின்னல் விழியாளே
ராகம்மா லைக்காத லோ
மோகமுல் லைவிரியும் மென்தோட்ட மோஇதழ்கள்
மோகத்தில் பாடுதோ மௌனராகம்-- தோகையே
மேகப்பூங் கூந்தலே மின்னல் விழியாளே
ராகம்மா லைக்காத லோ