பகல்கனவு காண்பதனால் பயனேது மில்லை - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 3 தேமா)
(1, 3 சீர்களில் மோனை)
பகல்கனவு காண்பதனால் பயனேது மில்லை;
பகட்டுகின்ற குணமதனால் பலனுமுண்டு தொல்லை!
தகுந்தவரும் உனைவிட்டுத் தான்செல்வர் எல்லை;
இகழ்ந்துரைத்தே ஏசிடுவர் இனியேது நன்மை?
- வ.க.கன்னியப்பன்