கைகேயியின் இரண்டு வரங்கள்
கட்டளைக் கலிவிருத்தம்
' 'ஏயவரங் களிரண்டில் ஒன்றி னாலென்
சேய்அரசாள் வதுசீதை கேள்வன் ஒன்றால்
போய்வனமாள் வதெனப் புகன்று நின்றாள்
தீயவையா வையினும் சிறந்த தீயாள் ''
என்று தயரதனிடம்மிகச்சுருக்கமாக இரு வரங்களையும் கேட்டாள் .
பின்னர் இராமனிடம் 1)ஆழிசூழ் உலகமெல்லாம் நீபோய்த் தாழிரும் சடைகள் தாங்கி,
2) தாங்கரும் தவம் மேற்கொண்டு
3) பூழி வெங்கானம் நண்ணி
4) புண்ணியத் துறைகள் ஆடி
5) எழிரண்டாண்டில் நீ வா
6) என்று இயம்பினன் அரசன்
என்று விரிவு படுத்திக் கூறியதன் காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தால்,
அவள் சிறந்த தீயாள் ஆனதன் காரணம், புலப்படும்.
தாழிரும் சடைகள் தாங்கி என்பது துறவு நெறியின் முதற்படி,இந்நிலையில் முனிவர்களுடன் இருக்கும் இராமனைக் கூற்றுவன் அணுகான்;
தீயவையா வையினும் சிறந்த தீயாள் ''. மிக மோசமான கெடுதிகளிலே முதலாவதாக நிற்கும் கெடுதியானவள் கைகேயி என்று அவளைக் கம்பன் உருவகப் படுத்துவது
மிகவு்ம் போற்றத்தக்கது.