இன்னும் உறங்குவதோ என்னவளே கண்திறப்பாய்
தென்றல் ஒருசேதி வீதியெலாம் சொல்லுது
நன்னிள வேனில்கா லைவிடிந்து விட்டதை
இன்னும் உறங்குவதோ சற்றுதிற உன்விழியை
சன்னலில் ஆதவனைப் பார்
தென்றல் ஒருசேதி சொல்லுது வீதியெலாம்
நன்னிளவே னில்காலை மெல்லவந்து விட்டதை
இன்னும் உறங்குவதோ என்னவளே கண்திறப்பாய்
சன்னலில் ஆதவனைப் பார்