கொடைக்கானல் தென்றல் குளிரினில்நீ பார்க்க

குடைபிடித்து வெய்யிலில் நீநடந்து செல்ல
கொடைக்கானல் தென்றல் குளிரினில்நீ பார்க்க
அடைமழை பெய்யும் மதியத்தில் இங்கு
நடையால் புதுவா னிலை

குடைபிடித்து உச்சியில்நீ கண்ணே நடக்க
கொடைக்கானல் தென்றல் குளிரினில்நீ பார்க்க
அடைமழை பெய்யும் அதிசயமாய் இங்கு
நடையால் புதுவா னிலை

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-23, 10:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 102

மேலே