காதலின் முதல்படி காமம்தானே

கண்ணே...!
உன்மேல் எனக்குள்ளது
காதலா?....காமமா?
புரியவில்லையே.
ஒன்றுமட்டும் நிச்சயம்
காதலின் முதல்படி காமம்தானே...!
பளபளக்கும் உன் செவ்விதழ்களா?
படபடக்கும் உன் இருவிழிகளா?
விடைக்கும் உன் இருநாசிகளா?
கேள்வியாய்த் தொங்கும் இரு செவிகளா?
என்னைகட்டிப் போடும் நீள் கூந்தலா?
ஏறிஇறங்கும் உன் மார்பழகா?
ஒடிந்துவிடும் உன் சிற்றிடையா?
திரண்டிருக்கும் செவ்வாழை தொடையழகா?
செவ்வரியோடிய உன் பொற்பாதங்களா?
இல்லை...
தேனென மயக்கிடும் உன் மென்குரலா?
ஏதோ ஒன்று என்னை இழுத்தது....
ஏதோ ஒன்று என்னை மயக்கியது.
நான் கண் மூடினாலும்
என்னுள்ளே நடமாடுகிறதே...
என்னைத் தூங்கவிடாமல் துரத்துகிறதே...
இதுதான் காதலா? - இல்லை
உன்மேல் இச்சைகொண்ட காமமா?
முதலில் உடற்கவர்ச்சி
தொடரும் மனக்கிளர்ச்சி...
மோகம் முப்பத்துநாள்
ஆசை அறுபதுநாள்.
முடிந்தபின்னும் இனிப்பதுதான்
தெய்வீக காதல்.
ஆனால்
காதலின் முதல்படி காமம்தானே...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (4-May-23, 10:07 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 96

மேலே