செவிலியர் தின சிறப்பு கவிதை

*இன்று செவிலியர் தினம்*........


💉💊💉💊💉💊💉💊💉

*செவிலியர் தின*
*சிறப்பு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💊💉💊💉💊💉💊💉💊

தெய்வங்கள் எடுத்த
அவதாரங்களில்
செவிலியர் என்பதும்
ஒரு அவதாரமே....!

தாய்
கண்ணீர் விட்டு
சிசுவை
தூக்கும் முன்பு
அதன்
இரத்தம் தொட்டு
தூக்கியவள்
இவளே....!

வெட்டப்பட்ட கை...
குத்தப்பட்ட வயிறு.....
கிழிக்கப்பட்டு தோல்....
உடைக்கப்பட்ட கால்...
சிதைக்கப்பட்ட உடல்....
கொட்டப்படும் குருதி
எதுவானாலும்
அஞ்சாமல்
சுத்தப்படுத்தி
கட்டுப்போடும் இவர்களின்
துணிவை
கடன்
வாங்கிக் கொள்ளுங்கள்
துணிவில்லாதவர்கள்..

தலைமை மருத்துவர்
எரிச்சல்.....
ஊசி போடும்
நோயாளியின் கதறல்...
காயத்திற்கு
மருந்து போடும்
நோயாளியின் அலறல் ....
உடல்நிலை சரியில்லாதவர்கள் உலறல்....
இவற்றையெல்லாம்
இவர்கள் மீது காெட்டினாலும் பொறுமையாக
நடந்து கொள்ளும்
பழக்கத்தை
எத்தனை பேர்
இவர்களிடமிருந்து
பழகிக் கொள்ள
போகிறோம்....?

கடிகாரம் கூட
கடமையை
இவர்களிடம்
இருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க
வேண்டும்.....!

கசப்பான
மருந்துகளையும்
மாத்திரைகளையும்
இவர்களுடைய
இனிப்பான அன்பானா
சொற்களில
கலந்து கொடுத்தே!
மரணத்தின்
நுழைவு வாயில் வரை
சென்றவர்களை கூட
மறுபடியும்
வாழ்க்கைக்கு
அழைத்து வந்திருக்கிறார்கள்....

வயதானவர்களுக்கு ஊன்று கோலாக...
குழந்தைகளுக்கு
தொட்டிலாக...... காயம்பட்டவர்களுக்கு
மயில்பீலியாக...
கரம் அடிப்பட்டவர்களுக்கு விரல்களாக......
கால் அடிபட்டவர்களுக்கு
நான்கு சக்கர நாற்காலியாக.....
உடல்நலம்
குன்றியவராகளுக்கு
ஒரு தாயாக
எத்தனை அவதாரம்..?
இவர்கள்
இல்லையென்றால்
எத்தனையோ
உயிர்கள் சேதாரம்....!

சகிப்புத் தன்மைக்கு
உதாரணம் கேட்டால்
உடனே
சற்றும் யோசிக்காமல்
கைநீட்டி காட்டுங்கள்
இவர்களை.....

கொரோனா காலத்தில்
புறமுதுகு காட்டி ஓடாமல்
எதிர்த்துப் போரிட்டு
தன் இன்னுயிரையே
இழந்தவர்களுக்கும்...
இன்னும்
போராடிக் கொண்டு இருப்பவர்களுக்கும்
கொரோன வைரஸ்சே!
மாலையிட்டு
மகுடம் சூட்டியிருக்கும்
கைகள் மட்டும்
இருந்திருந்தால்.....

இரவில்
மருத்துவமனையில்
நோயாளிகள்
நிம்மதியாகத்
தூங்கிக் கொண்டு
இருப்பதற்கு காரணம்
இவர்கள்
விழித்துக்
கொண்டிருப்பதால் தான்....!

நாமும் அவர்களை
ராணிககளாக
நடத்தாமல் போனாலும்
அடிமைகளாக
நடத்தாமல் இருப்போம்..!
அவர்கள்
ஜாதி மதம் பார்த்து
பணிவிடை
செய்யாதது போல்....
நாமும்
கௌரவமும் அந்தஸ்து
பார்க்காமல்
அவர்களை மதிப்போம்....!


*கவிதை ரசிகன குமரேசன்*

💊💉💊💉💊💉💊💉💊

எழுதியவர் : கவிதை ரசிகன் (13-May-23, 9:53 pm)
பார்வை : 15

மேலே