காலையில் மாலையில்
காலையில் மாலையில்.
அணைத்திடு,
அன்னையே என்னை நீ,
தினம் காலையில்
ஒரு தரம் அணைத்திடு,
நான் மாலை வரை
மகிழ்வுடன் இருப்பதற்கு.
அணைத்திடு,
அன்னையே என்னை நீ
தினம் மாலையில்
ஒரு தரம் அணைத்திடு,
நான் இரவெல்லாம்
மகிழ்வுடன் உறங்கிடவே.
முதுமையில்,
அன்னையே என்னை நீ
ஒரே ஒருதரம் இறுகவே
உன்னுடன் அணத்திடு
ஜோதியாய் நான் உன்னுடன் கலந்திடவே.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.