தஞ்சா ஊரின் சிறப்பு

கரூராரின்அழகிய பாடலொன்றை கரூரில் உள்ள ஒருக் கோயிலில் கல்வெட்டில் பதிந்துள்ளதை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எம்பெருமான் சிவனைப்பற்றியும் மெய்க்கீர்த்தி இராச இராசனைப் பற்றியும் புகழ்ந்துள்ளதைக் காணலாம்.


நெற்றிக் கண்யென் கண்நின் றகலா
நெஞ்சி னிலஞ்சி லம்பு அலைக்கும்

பொற்தி ருவடி யென்குடி முழுதாள
புகுந்த னவது போதன இல்லை

மற்றை யவெனக் குறவு யென்ன
மறிதி ரைவட வாறி டுபுனல்


எற்று நீர்கிடங்கு மதகு வாழ்முதலை
இஞ்சிசூழ் தஞ்சையிரா சராசேச்ரம்

பாடலில் சிலவரிகள் சில வார்த்தைகள் விடுபட்டுள்ளமையால் இன்னவகைக்
பாடலென்று ஊகிக்க முடியவில்லை

பாடல் விளக்கம்

சிவபெருமானின் நெற்றிக்கண்ணைக் கண்டயென் கண்களில் இருந்து மறையவில்லை. அவரின் பாத சலங்கையின் ஒலிகள் எனது நெஞ்சில் அலையாக மோதுவது நிற்கவில்லை. அப்படிப்பட்ட
எம்பெருமானின் பொற்பாதங்கள் எமது குடிமக்களை ஆண்டுகொண்டிருக்கிறது இன்னும் போகவில்லை. மதில் சுவர்கள் எழுப்பி அகழியும் அகழ்ந்து அதில்வடவாறு நீரைக் கால்வாயாக வெட்டிக் கொண்டு சேர்த்த நீரில்முதலைகள் விடப்பட்டுள்ளன. அந்த முதலைகள் அகழி நீரில் தைரியமாகத் துள்ளி நீரலைகளை ஏற்படுத்தி விளையாடுவதைக்காணும்படியான் திரு இராஜேச்சுரம் (தஞ்சாவூர்) என்பது பாடலில் விளக்கமாம்.


....

எழுதியவர் : சேர்த்தது பழனி ராஜன் (15-May-23, 8:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே