உண்மை அழகு நீ சித்திர பாவையே

உன்னைப் படைத்த பிரம்மன் என்ன
நினைத்து உன்னைப் படைத்தானோ அறியேன்
உன்னில் உன்னுருவாய்க் காணும் அங்கமெல்லாம்
மாசிலா தங்கம்போல உண்மையாய்க் காட்சிதர
இருப்பதை இல்லாததுமாய் இல்லாததை இருப்பதுமாய்க்
கூறி பாடும் கவிஞன் உன்னை
உன்னழகை எப்படித்தான் எழுதுவானோ என்று
சிந்தித்தேன் சித்திர பாவையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-May-23, 12:35 am)
பார்வை : 105

மேலே