உன் நினைவுகள் மரணிக்கவில்லை 555
***உன் நினைவுகள் மரணிக்கவில்லை 555 ***
உயிரானவளே...
நகமும் சதையும் போல இணைந்தே
இருப்பது மட்டும் காதல் இல்லையடி...
நீ என்னை
மறந்த பிறகும்...
நான் உன் நினைவில்
வாழ்வதும் காதல்தான்...
உன்னுடன் சேர்ந்து வாழ்வதுதான்
காதல் என்று நீ நினைக்கிறாய்...
உன் அழகிய
நினைவுகளே போதுமடி...
நான்
சுகமாக வாழ்வதற்கு...
நீ விட்டு சென்றதால் என்
இதயம் மரணித்து போகவில்லை...
உன் நினைவுகள் தொட்டு
தொட்டு உரசி செல்வதால்...
என் இதயம்
உயிருடன்தான் இருக்கிறது...
என் நினைவுகள் உனக்குள்
மரணித்து போனதால்...
காதலும்
மரணித்து இருக்கலாம்...
எனக்குள் உன்
நினைவுகள் இருக்கும் வரை...
நான் மட்டுமல்ல நம்
காதலும் மரணிக்காது மண்ணில்.....
***முதல்பூ.பெ.மணி.....***