அபிஷேகம்

அகிலம் போற்றும் அழகி உனக்கு
காதலால் செய்தேன் அபிஷேகம்
பல்லவர் செதுக்கிய சிற்பம் உனக்கு
கவிகளால் செய்தேன் அபிஷேகம்
என் நெஞ்சை குத்தி கிழித்து நீ
ரத்தத்தால் செய்தாய் அபிஷேகம்
கிழிந்துபோன என் நெஞ்சுக்கு
கண்ணீரால் செய்கிறேன் அபிஷேகம்

எழுதியவர் : நிழல்தாசன் (24-May-23, 9:14 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : abishegam
பார்வை : 61

மேலே