மழலை..!!

உன் இதழோரம்
சிந்திடும் தேன்
துளியை கண்டு
ரசித்திட வேண்டும்..!!

நீசெய்யும் சிறு
சிறு குறும்புகள்
கூட அழகழக
ரசித்திட வேண்டும்..!!

நீ பேசாத மொழியில்
நானும் கற்று
தேர்ச்சி பெற
வேண்டும்..!!

உன்னுடன் நெருங்கையில்
வாசனை ஆளை
மயக்கும்
நறுமணம்..!!

பிஞ்சு விரல்கள்
மோதி நெஞ்சம்
உடைய கண்டேன்
அத்தனையும் உன்னாலே..!!

யார் செய்த
புண்ணியமோ
இந்த ஜென்மத்தில்
உன்னை கண்டேன்..!!

உன்னுடன் சேர்ந்து
நானும் மழலையாகவே
பயணிக்கிறேன்
வாழ்வில்..!!

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (25-May-23, 6:18 am)
பார்வை : 29

மேலே