என் மனதில் உன்னை குடிவச்சேன் 555

***என் மனதில் உன்னை குடிவச்சேன் 555 ***


ப்ரியமானவளே...


த்திரி வெயில் போயாச்சி
வைகாசி பொறந்தாச்சி...

அத்தி மலர் மலர்ந்தாச்சி
அத்தை மகள் நீயும் வளர்ந்தாச்சி...

உன்னை நினைச்சி
வாழை வச்சேன்...

என் மனதில்
உன்னை குடிவச்சேன்...

வாழை
மரம் பூத்தாச்சி அத்தை
மகள் நீயும் பூப்பெழுதாச்சி...

இத்தனை ஆண்டுகள்
இன்பமாய் செல்ல...

இன்று உன்னுடன் பேசும்
நான் உன் மன்னவனாகவும்...

நீ என் மனைவியாகவும்
தினம் காணவேண்டும்...

தேன் நிலவின் இன்பம்
நாம் சேரவேண்டும் என்றும்...

நாம் சேர்ந்து
கொள்ளும் நாளொன்று
சேதி சொல்லடி இன்று...

வாழை
இலை
யும் வளர்ந்திருக்கு...

நம்மை வாழ்த்த
வருபவருக்கு பந்தியிட...

அத்தை மகள் உனக்கு மெட்டி போட்டு
முத்தமிட காத்திருக்கிறேன்...

எனக்காக நீயும்
அழகாய் பூத்து இருக்கிறாய்...

நாம் மணந்து கொள்ளும்
நாளுக்காக காத்திருக்கேன்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (27-May-23, 5:38 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 149

மேலே