விரைந்திடடா தம்பி

விரைந்திடடா தம்பி...!
--------------
புற அழகை கண்டு நீயும் மயங்கிடாதே தம்பி
புத்துக்குள் பாம்பொன்று மறந்திடாதே தம்பி
பார்வையிலே பாம்புந்தான் கவர்ந்திழுக்கும் தம்பி
நம்பிவிட்டால் தினம்தினம் மரணம்தான் தம்பி
மலரதன் அழகைத்தான் ரசித்துவிடு தம்பி
மாலைக்குள் வாடிவிடும் சத்தியமடா தம்பி
தேன் துளிகள் சுவைக்கத்தான் உனைத் தூண்டும் தம்பி
அதில் துளி விஷமும் கலந்திருக்கு நம்பிவிடு தம்பி
சமுத்திரத்தின் ஆழம் கூட அளந்திடலாம் தம்பி
மனமதனின் ஆழமதை அளக்க முடியாதே தம்பி
பொங்கிவரும் இளைமையது நீர்குமிழியடா தம்பி
நிலைமாறி வெடித்து வெறும் சூனியம்தானடா தம்பி
மற்றவரின் மூளையதை உபயோகித்திடாதே தம்பி
உன் மூளையதை நம்பி நீயும் நடைபோடுடா தம்பி
குருதிசூடு இருக்கும்வரை ஆட்டமாடும் தம்பி
சூடடங்கி குளிர்ந்துவிட்டால் சுடுகாடுதான் தம்பி
இருக்கும்வரை இயல்பாய் நீ வாழ்ந்திடடா தம்பி
எல்லை மீறிப் போனபின் ஏமாந்திடாதே தம்பி
உன் கையே உனக்குதவி நம்பிவிடு தம்பி
உன்பாதை வகுத்து நீயும் விரைந்திடடா தம்பி

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-May-23, 11:55 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 31

மேலே