அவள் அப்படிதான்
அமலா தனியறைக்குள் வாதம் செய்து கொண்டிருந்தாள்!
அப்படி என்னதான் செய்வாய் ஏகாந்த சுவருடன் என கேட்க நேரிட்டது?
என் நிலுவையில் உள்ள கதைகளை சொல்லிக்கொண்டிருப்பேன் சுவர்களின் செவியில்.
தனிமையில் புலம்பும் உனக்கு இது பைத்தியக்காரத்தனம் என்று தோன்றாதா?
தனிமை என்று யார் சொன்னது!! அவ்வப்போது பதிலுக்கு பல்லிகளும் ம்ம்ம் கொட்டுமே.
அவள் அப்படிதான்...
- கௌசல்யா சேகர்