காதலா கடவுளா
காதலா, கடவுளா?
உலகம் சுற்றுது
எதனாலே?
யாரிடம் கேட்பது
இதற்குப் பதில்!
விஞ்ஞானி,
கடவுள் அல்ல
"ஈர்ப்புச் சக்தி"
என்பான்.
இளமை கூறும் ,
கடவுள் அல்ல
நிச்சயம் அது
" காதல், காதல் "
காதலோடு உருண்ட
இந்த இளமை,
முதுமையில் !
"கடவுள் கடவுள்"
என்று கூறிவிடும்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.