புலன்கள்

கண்கள் இரண்டு தந்தான் இறைவன்
எண்ணிலா நல்லதாய் இயற்கையில் கண்டிட
அவற்றில் லெல்லாம் அவனைக் கண்டிட
காதுகள் இரண்டு தந்தான் இறைவன்
நல்லதைக் கேட்டு உள்வாங்கி தீயதை
துறந்து வெளியேற்றிட நாசியும் தந்தான்
உயிர்க் காற்று உள்ளிழுத்து வாழ்ந்திட
நல்ல வாசனையில் அவனைக் காண
வாய்த்த தந்து அதில் நாவும் வைத்தான்
தேன்போல் நல்ல இறைமொழிப் பேசிட
இப்படி நினைத்து வாழ்ந்திடில் அந்த
ஐம்புலன்களும் அடக்கி வாழ்ந்திடலாமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Jun-23, 7:21 pm)
Tanglish : pulangal
பார்வை : 29

மேலே