காற்றுவெளியிடைக் கண்ணம்மா
காற்றுவெளியிடைக் கண்ணம்மா
என் சுபாவங்களால்
உன்னை நிறைந்திருக்கிறேன்.
நீ சுவாசித்த காற்றெங்கிலும்
நறுமணங்களாய் வியாபிக்கிறேன்.
மரணமே என்றாலும்
உன் ப்ரங்ஞை தவறிய
உணர்வுத் தளத்திற்கு அப்பால் நின்றுவிட்டு
வெம்மையாய் மூர்ச்சிக்கிறேன்.
நீ கைப்பற்றிய என் தேக வலிமை
உன் ஜென்மாந்திர வரம்.
பிலாக்கணம் வேண்டாம்
நாளாந்தமான என் ஆகிருதியின் ஒளி
"தமபிரபை"யில்
பாதை உணரும் உன்னதம் அறிவாயா ?
எப்படியெல்லாமோ என சிரமித்துதானே
உனக்குள் உன்னை
நானாக்கினேன்.
பிறகு எங்கே என்னை பெருவெளியில் தேடுகிறாய் ம் ?
பூக்காரன் கவிதைகள் - பைராகி