மனிதம் காத்து வாழுங்கள்

தொடும் தூரத்தில் இல்லை
பார்வையில் தெரியும்
தொடுவானம் !
தோன்றி மறையும் நீர்க்குமிழி
ஆயுள் இல்லாத
அதிசயப்பிறவி !
இலைமீது படியும் பனித்துளி
கதிரொளி பட்டதும்
மறைந்திடும் !
ஓயாமல் எழுகின்ற அலையும்
வீழ்ந்து கடல்நீராகும்
நிலைதான் !
காலையில் மலர்ந்த பூக்களும்
மாலையில் உலர்வது
இயற்கை!
மனித வாழ்வும் நிரந்தரமல்ல
மடிந்து முடிவதே
வாழ்க்கை !
வல்லவர் ஆனாலும் வையத்தில்
வாழ்பவர் மாள்வது
நிச்சயம் !
புரிந்தவர் புரிந்து வாழுங்கள்
மனிதம் காத்து
வாழுங்கள் !

பழனி குமார்
08.06.2023

எழுதியவர் : பழனி குமார் (8-Jun-23, 7:59 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 41

மேலே