நேற்றுநாளை

நேற்று..நாளை..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நேற்று நடந்தவைக்
காற்றோடுக் கலக்கட்டும்
மாற்றுச் சிந்தனை
மாற்றங்களை செய்யட்டும்

தோற்றவை யாவும்
கற்றவை ஆகிட
பற்றுதல் கொண்டே
முற்றிட முன்னேற்றமே

சற்றும் தாமாதிக்காது
இன்றே செய்திட
வெற்றியும் உண்டே
நாளையெனில் ஏமாற்றமே

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jun-23, 9:43 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 65

மேலே