வானமும் வசப்படுமே
வானமும் வசப்படுமே
₩₩₩₩₩₩₩₩₩₩₩
வானமும் வசப்படுமே
வறுமை விலகிடவே/
தானமும் செய்திடவே
தரணியில் நிலைப்போமே/
கானம் ஒலித்திடும்
காற்றேறிய மூங்கிலாக/
மனம் உறுதியானல்
மறுவாழ்வு நிதர்சனமே/
சினமில்லா புன்னகையே
சிறந்திட வாழியாக/
தனம் சேரும்
தினம் இடையின்றியே/
ஞானம் உரமாக
ஞாயிறும் உன்பக்கம்/
சனனம் வீழ்வதற்கல்ல
சாதித்து வாழ்ந்திடவே/
சுணக்கமற்ற உழைப்பால்
சுகபோகம் தருமே/
இனப்பிரிவின்றி இணைந்திட
இமயமாகும் எதிர்காலமே/
கவிஞர் செல்வி.ஞான.அ.பா.அனுஷ்கா