காளை வயது
காளை வயது.
அன்று,
சின்னம் சிறு வயது
குறும்புகள் செய்து
சிரித்து திரிந்த வயது.
அப்பா அம்மா
சொல் கேட்டு
அவர்கள் அன்பில்
திளைத்த வயது.
பாட்டி கதைகள்
கேட்டு
அவள் மடியில்
உறங்கிய வயது.
இன்று
படிப்பில் கவனம்
குறையும் வயது,
கன்னியர் மீது கவனம்
செல்லும் வயது.
எல்லோரிடமும் ஏச்சு
வாங்கும் வயது
இந்த பொல்லாத
காளை வயது.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.